பள்ளிபாளையம்:பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்
பள்ளிப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.;
பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களை பெற்ற மாணவிகள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்ததால்,பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடப்பட்டன.
தற்பொழுது தொற்று பரவல் குறைவு காரணமாக தமிழக அரசு இன்று முதல் கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியது.
மாணவிகள் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை ,ஆதார் கார்டு மற்றும் முக கவசம் அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு,பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்கள் மாணவியருக்கு வழங்கினர்.மாணவிகள் மகிழ்ச்சியுடன் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.