வண்ண மயமாகிறது குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வண்ண பெயிண்டிங் அடிக்கும் பணி தொடங்கியுள்ளது;

Update: 2023-06-14 11:45 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வண்ண பெயிண்டிங் அடிக்கும் பணி துவங்கியுள்ளது

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வண்ண பெயிண்டிங் அடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு போதிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது. மாணவர்களுக்கு மின்விசிறி கூட இல்லாத நிலை நீடித்து வருகிறது. முன்பு இருந்த பி.டி.ஏ. நிர்வாகிகள் மூலம் பள்ளிக்கு சுற்றுச்சுவர், சைக்கிள் ஸ்டாண்ட், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது மாணவர்கள் நலன் கருதி பள்ளி மேலாண்மை குழு சார்பில் வகுப்பறைகளுக்கு வர்ணம் அடிக்கும் பணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் தொடங்கியுள்ளது.

பணிகளை துவக்கி வைத்து பள்ளி மேலாண்மைகுழு தலைவி ஸ்ரீதேவி பேசியதாவது: மாணவர்கள் நன்கு படித்து, பெற்றோர் பெருமை படும்படி வாழ வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சமுதாயத்தில் சிறந்த மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைக்கும் பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News