குமாரபாளையத்தில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்கம்
குமாரபாளையம் அரசு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டது;
வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குமாரபாளையம் அரசு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் துவக்கப்பட்டது.
வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல்,காய்கறி தோட்டம் அமைத்தல், கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருவர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், மாணவர்கள் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவுப்படி காலை வழிபாட்டு கூட்டத்தில் வாரத்தின் முதல் நாளில் பள்ளி தூய்மை உறுதிமொழி எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வழிபாட்டு கூட்டத்தில் பொறுப்பு தலைமையாசிரியர் மாதேசு முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வெளிநாடு சுற்றுலா சென்ற இப்பள்ளி மாணவர்..
தட்டாங்குட்டை ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்ச்செல்வன் தாமரைச்செல்வி தம்பதியர். இவர்களின் இளைய மகன் இளவரசன் வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
சென்ற ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றான். மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றதால் தரப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவனுக்கு கலையரசன் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.
அவ்வாறு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மலேசியா அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு நாட்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சனிக்கிழமை காலை மீண்டும் சென்னை வந்து சேர்வார்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.