ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜன 6 ல் கோவையில் மாநில மாநாடு
ஓ.பி.எஸ். அணியினர் சார்பில் கோவையில் வரும் ஜனவரி 6 ல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது;
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வினரின் ஓ.பி.எஸ். அணியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவை தலைவர் மணி தலைமையில் நடந்தது.
இதில், தீவிர உறுப்பினர் சேர்க்கை, வார்டுக்கு 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்தல், கட்சி வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்துதல், உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலர் நாகராஜன் பேசியதாவது:இந்த கூட்டம் நடக்கும் இடம், மாவட்டத்தின் பல இடங்களிலிருந்து வரும் நிர்வாகிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, சாலை நுழைவுப் பகுதியில் அ.தி.மு.க. கட்சி 5 கொடிகள் கட்டியிருந்தோம். அதனை சிலர் தூண்டுதல் பேரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் அகற்றினர்.
இது சரியா? இந்த கட்சியில் பலனை அடைந்து விட்டு, தற்போது தி.முக.வினருக்கு ஆதரவு கொடுத்து வரும் எதிரணியினருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி பற்றி எங்கும் பேசக்கூடாது என எண்ணினேன்.. ஆனால் இந்த சம்பவத்தால் பேச வேண்டியதானது. ஜன.6ல் கோவையில் மாநில மாநாடு நடைபெற வுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், வடக்கு ஒன்றிய செயலர் தனபால், மேற்கு ஒன்றிய செயலர் சண்முகம், நிர்வாகிகள் ஈஸ்வரன், பாலுசாமி, லோகநாதன், சீனிவாசன், உள்பட பலர் பங்கேற்றனர்.