தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஓராண்டு நிறைவு

குமாரபாளையத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது;

Update: 2023-06-11 12:45 GMT

குமாரபாளையம்  அரசு மருத்துவமனையில் நடைபெற்ற  தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா 

தூய்மைக்கான மக்கள் இயக்க ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழா நடந்தது. எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு ஆனதையொட்டி, இதற்கான விழா குமாரபாளையம் நகராட்சி சார்பில் ஜி.ஹெச்.ல் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. குப்பையில்லா நகரம் உருவாக்குவது சம்பந்தமாக உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம்  அரசு மருத்துவமனையில்  நீண்ட நாட்களாக தண்ணீர் குழாய் பழுதான நிலையில் இருந்தது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் வசம், டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஒரே நாளில் பழுதான குழாய் சரி செய்யப்பட்டு, தண்ணீர் விநியோகம் சீரானது. இதையடுத்து  மருத்துவமனை நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.



Tags:    

Similar News