வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்;
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை வளாகம், பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி கடைகள் உள்ளன. இதில் பலரும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். வருட கடைசி என்பதால் வாடகை நிலுவை உள்ள கடையினர் வசம், ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த சொல்லி நேரில் பலமுறை அறிவுறித்தினர். அதையும் மீறி வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவின் பேரில் பாலக்கரை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் உள்ள இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஓரிரு மாதங்கள் வாடகை செலுத்தாத கடையினரிடம் குறிப்பிட்ட காலத்தில் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கபடும் என எச்சரித்தனர்.
நகராட்சி நிர்வாகம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர் மயமான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள் தொகையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகர்ப் புறங்களில் வசிக்கின்றனர். தமிழ்நாடு அடுத்த இருபது ஆண்டுகளில் நகர் மயமாதலில் முன்னிற்கும். வேகமான நகர் மயமாக்கல் பெரும் பொருளாதாரத் தேவைகளையும், அதே சமயம் பெரும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப் புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சிகளை ஆளும் திறன் கொண்ட தன்னிறைவு பெற்ற நிறுவனங்களாக மேம்படுத்துவதே இவ்வரசின் நோக்கமாகும். நகர்ப்புற ஆளுமையை நன்கு வழிநடத்த சிறந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளும் தேவை என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. இதற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மிகச் சிறந்ததாக ஆக்குவதற்கு இவ்வமைப்பில் செயல்படுவோரின் திறன் மேம்பாட்டினை உயர்த்தும் நடவடிக்கைகளை செம்மைப்படுத்தி வலுப்படுத்தும்.
நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உள் கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு வரியினங்களின் வாயிலாக வருமானம் வர வேண்டும். அப்போதுகான் உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியின்றி இயங்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.