அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தலின் படி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு வழிகாட்டுதலின் படியும் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நடந்து வருகிறது.
இச்சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் ராமு முகாமை பார்வையிட்டார்.மேலும் மாணவர்களிடையே மரம் நடுதல், டெங்கு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் நாட்டு நலப்பணித் திட்ட சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் மாணவர்கள் அனைவரும் தங்களை சமூக சேவை மற்றும் விழிப்புணர்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கவிராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.