மது போதையில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் மது போதையில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-07-03 10:45 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜ்பீர்சிங், 55. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் டூவீலர் சீட் கவர் விற்கும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் அவர் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் நேரில் வந்து பார்த்த போது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் படுத்த நிலையில் இருந்துள்ளார். மேலும் மது குடித்த பாட்டில்கள் அவரது அருகில் கிடந்தன. மது குடித்து அதிக போதையில் இருந்ததாக தெரியவந்ததையடுத்து, இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News