குமாரபாளையத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
குமாரபாளையத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்றுக்கொண்டார்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாசில்தாராக சண்முகவேல் செயல்பட்டு வந்தார். இவர் தற்போது திருச்செங்கோடு செட்டில்மென்ட் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். குமாரபாளையம் புதிய தாசில்தாராக சிவகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் ஏற்கனவே குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார், ஓ.ஏ.பி. தாசில்தார் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். புதிய தாசில்தார் சிவகுமாரை, தாலுக்கா அலுவலக பணியாளர்கள், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சித்ரா, கீர்த்திகா, உஷா, மல்லிகா, உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, வாழ்த்து கூறினார்கள்.
புதிய தாசில்தார் சிவகுமாரிடம், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வட்ட வழங்கல் அலுவலகத்தை முதல் தளத்தில் அமைக்க கோரிக்கை விடுத்தனர். தற்போது அந்த அலுவலகம் இரண்டாவது தளத்தில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளதாக கோரினர்.