குமாரபாளையத்தில் நகராட்சித் தலைவர் தொடங்கி வைத்த நீர் மோர் பந்தல்
கோடைகாலத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு உதவும் வகையில் குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தலை நகராட்சி தலைவர்தொடங்கி வைத்தார்.;
குமாரபாளையத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை நகர மன்றத்தலைவர் விஜயகண்ணன் திறந்து வைத்தார்.
குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தலை நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் தொடங்கி வைத்தார்.
கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெப்பத்தின் தாக்குதலில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை உண்டு வருகின்றனர்.
கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு உதவிடும் எண்ணத்தில், பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது.
நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகியவற்றை விநியோகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடைபாதை கடையினர் கோடை வெப்பத்திலும் தங்கள் வியாபாரத்தை கவனித்து வருகின்றனர். குறிப்பாக காலை 11 மணிமுதல் மாலை 5: மணி வரை ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரம் மிகவும் பாதித்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். விசைத்தறி கூடங்களில் பெரும்பாலும் சிமெண்ட் அட்டை போடப்பட்டு இருப்பதால், அங்குள்ள தொழிலாளர்கள் வெப்பத்தை தாங்கிக்கொண்டு சிரமத்துடன் பணியாற்றி வருகிறார்கள். இது போன்ற தொழிலாளர்கள், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்ல வேண்டிய பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினருக்கும் இந்த நீர் மோர் பந்தல் பயனளிக்கும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.