குமாரபாளையத்தில் டிவைடர் சேதத்தால் விபத்து அபாயம் : நடவடிக்கை தேவை
குமாரபாளையத்தில் முக்கிய சாலைப்பகுதியில் டிவைடர் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
குமாரபாளையம் :
குமாரபாளையம் கத்தேரி பிரிவு, அம்மா பூங்கா அருகே டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டாததால் பல வாகனங்கள் இதன் மீது மோதி பலத்த சேதமடைந்து, அதன் கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் உள்ளது.
வேகமாக வரும் டூவீலர்கள் இந்த டிவைடர் கம்பியில் சிக்கி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் காயமடைந்து வருகிறார்கள். குமாரபாளையம் நுழைவுப்பகுதி என்பதால் அதிக வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. பூங்கா அருகில் இருப்பதால் பூங்காவிற்கு அதிக வாகனங்கள் வந்து கொண்டுள்ளன. இந்த வாகனங்களும் இதில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த டிவைடரை சீர் படுத்தி ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.