அரசு பள்ளியில் என்.சி.சி. பிரிவிற்கு மாணவர்கள் தேர்வு
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் ஆண்டாக என்.சி.சி மாணவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர் தேர்வு நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் ஆண்டாக என்.சி.சி மாணவர்கள் புதிதாக தேர்வு செய்தார்கள்.
ஈரோடு தமிழ்நாடு 15 வது பாட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் ஜெய்தீப் ஆணையின் படியும், சுபேதார் மேஜர் சுரேஷ் ஆலோசனை படியும், சுபேதார் பிரீத், விக்டர், விஷ்ணு யாதவ், சதீஷ் ஆகியோர் பங்கேற்று, இந்த ஆண்டிற்கான 22 என்.சி.சி மாணவர்களை தேர்வு செய்தனர். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், மற்றும் மாணவர்களின் உயரம், எடை அளவு, உடல்நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தஆடலரசு தலைமை வகித்தார்.
பி.டி.ஏ.நிர்வாகிகள் வெங்கடேசன், அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கார்த்தி, சரவணன், கவிராஜ் , சிவகுமார், தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சிகள் வழங்கப்படும். இறுதியில் ஏ எனும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த சான்றிதழானது மாணவர்களின் உயர்கல்விக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், வழக்கறிஞர் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கும்5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த தேர்வினை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஏற்பாடு செய்தார்.