குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் என்.சி.சி. மாணவர்கள் தூய்மை பணி

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் என்.சி.சி. மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.;

Update: 2022-06-03 14:00 GMT

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.

ஆண்டுதோறும் குமாரபாளையம் அரசு ஆண்கள் என்.சி.சி. மாணவர்கள் தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று முதல் தூய்மை என்சிசி மாணவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் பாரதி, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி தலைமை வகித்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்கா, மூலிகை தோட்டம், மருந்தகம் உள்ளிட்ட வளாகம் முழுதும் தூய்மை பணி செய்யப்பட்டது. இந்த பணிகள் இன்னும் 4 நாட்கள் நடைபெறும்.

Tags:    

Similar News