நெருங்குது நவராத்திரி : கொலு பொம்மைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்

குமாரபாளையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Update: 2021-10-02 06:00 GMT

குமாரபாளையம்:

ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் பெண்களுக்கு 9 நாட்கள் நவராத்திரி என்றும் சான்றோர் கூறுவார்கள். ஆண்டுதோறும் நவராத்திரி விழா புரட்டாசி மாத இறுதியில் கொண்டாடுவது வழக்கம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும்  விஜயதசமி பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி அக். 7ல் நவராத்திரி விழா துவங்கி, அக். 14ல் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், அக். 15ல் விஜயதசமி பூஜையும் நடைபெறவுள்ளது. இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து, தினசரி சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பக்தி பாடல்கள் பாடி, பூஜைக்கு வரும் பெண்களுக்கு திருமாங்கல்ய மஞ்சள் கயிறு, குங்குமம், புடவை உள்ளிட்டவைகளை வழங்கி ஆசி பெறுவது வழக்கம்.

நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்மைகள் வாங்க பொதுமக்கள் குமாரபாளையம் கொலு பொம்மை கடைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பரத நாட்டிய செட், திருமண செட், வளைகாப்பு செட், இறைவன் திருவுருவங்கள், புராண காலத்து நாயகர்கள், நாயகிகள், கிறிஸ்து பிறப்பு மற்றும் கிறிஸ்துமஸ் விழா செட், மசூதி செட் என அனைத்து மத பொம்மைகளும் கொலுவில் வைத்து வழிபடுவார்கள். நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்மைகள் வாங்க பொதுமக்கள் குமாரபாளையம் கொலு பொம்மை கடைகளில்ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல கோவில்களிலும் நவராத்திரி கொலு வைப்பது வழக்கம்.

Tags:    

Similar News