அரசு பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினக் கொண்டாட்டம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் கொண்டாடப்பட்டது;

Update: 2023-09-13 10:00 GMT

தேசிய மகளிர் போலீஸ் தினத்தையொட்டி, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த விழாவில் எஸ்.ஐ. சந்தியாவிற்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ்  தினக் கொண்டாட்டம் நடந்தது.

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய மகளிர் போலீஸ் தினம் விடியல் ஆரம்பம் சார்பாக, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் சந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பாரதி சால்வை அணிவித்து பாராட்டினார்.

இதன் பின் பேசிய சந்தியா, காவல்துறை பணிகள் பற்றியும்,அந்த துறையில் தன்னுடைய பணியை பற்றியும், மாணவிகளுக்கு உடல் பயிற்சியால் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் பற்றியும் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் நவநீதன், ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளர் சண்முகம், தீனா ஆகியோர் பங்கேற்றனர்.

காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சந்தியாவிற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சித்ரா, மல்லிகா, வினோதினி, மாவட்ட செயலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதர பெண் போலீசாருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

 மாரியம்மன் கோவிலில் அரசு பள்ளி மாணவர்களுடன் சிறப்பு வழிபாடு 

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சில நாட்கள் முன்பு நிறைவு பெற்று, மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி சேவைகள் செய்து வரும் விடியல் ஆரம்பம் சார்பில், அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் 24 மனை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடத்தப்பட்டது.

மாணாக்கர்கள் நன்கு கல்வி கற்கவும், வாழ்வில் முன்னேறவும் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பிரார்த்தனை செய்யப்பட்டது. கோவிலில் தெய்வங்களை எவ்வாறு வழிபட வேண்டும் என கற்றுத் தரப்பட்டது. இவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சமூக சேவகி சித்ரா, தீனா, சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News