குமாரபாளையத்தில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

குமாரபாளையம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது;

Update: 2023-05-30 08:30 GMT

குமாரபாளையம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  நடைபெறும் என்.சி.சி. பயிற்சி முகாம் 

குமாரபாளையம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 நாள் என்.சி.சி. பயிற்சி முகாம் மே 24ல் தொடங்கி, ஈரோடு 15 ஆவது பட்டாலியன் சார்பாக நடந்து வருகிறது.

ஈரோடு 15 ஆவது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் கர்னல் ஜெய்தீப் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இவர் மாணவ, மாணவிகளின் உடல்நலம், பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் டெப்டி கமாண்டன்ட் கர்னல் சூரஜ் நாயர் மற்றும் ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் சுபேதார் மேஜர் சுரேஷ் பங்கேற்றனர்.

இம்முகாமில் 350க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெறுகிறார்கள். இந்த முகாமில் மாணவர்களுக்கு ட்ரில், துப்பாக்கி சுடுதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி உடற்பயிற்சி கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் இவற்றில் 55 கல்லூரி மாணவ மாணவிகள் அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

தேசிய மாணவர் படை அலுவலர்கள் பிரேம்குமார் வெண்ணிலா, அந்தோணிசாமி, சிவகுமார், ஜீவானந்தம், மகேஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் பட்டாலியன் ஹாபில்தார் மேஜர் தன்ராஜ், அன்பழகன், பாட்ஷா விக்டர் ராம், வெங்கடேஷ் உள்ளிட்ட பல ராணுவ பயிற்சியாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இந்த பயிற்சி முகாம் முடிந்தவுடன் மாணவ மாணவிகளுக்கு A, B, C சான்றிதழ்கள் வழங்கப்படும். இது ஆண்டு இறுதியில் எழுத்து தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.



Tags:    

Similar News