நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

குமாரபாளையத்தில் நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2024-05-22 11:45 GMT

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு நிகழ்ச்சியையொட்டி, லட்சுமி நரசிம்ம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

 குமாரபாளையத்தில் நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் நரசிம்மர்

ஜெயந்தி விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமிகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள மங்களாம்பிகை, மகேஸ்வரர், சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கால பைரவர், தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், கல்யாண விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினார்கள். சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. வழி நெடுக பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:

சனிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்த நாளில், பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தி வழிபடுவோம். நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து அருளுவார் ஸ்ரீமகாவிஷ்ணு.

சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் கோவில்களில் வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள்.

சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் செய்பவர்கள், அதாவது குடும்பத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் அல்லது பதினொரு ரூபாய் முடிந்து வைப்பார்கள். பெருமாளை மனதில் நினைத்து, சனிக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதாவது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று வரும். இந்த இரண்டு ஏகாதசிகளுமே, பெருமாள் வழிபாட்டுக்கு உரிய திதிகளாகப் போற்றப்படுகின்றன. ஏகாதசியில் விரதம் தொடங்கி மறுநாளான துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்கிற பெருமாள் பக்தர்களும் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை என்பதும் திருமால் வழிபாட்டுக்கான நாள்தான். ஏகாதசி திதி என்பது பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள்தான். இந்த இரண்டு விஷயங்களும் இணைந்து வருகிற நாள், இன்னும் நல்ல அதிர்வுகள் கொண்ட நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சனிக்கிழமையில் பெருமாளுக்காக விரதம் மேற்கொள்பவர்களும் ஏகாதசியில் விரதம் இருக்கிற பெருமாள் பக்தர்களும் மும்மடங்குப் பலன்களைப் பெறுவதாக ஐதீகம். பெருமாளுக்கு விளக்கேற்றி வேண்டிக்கொண்டு, காலை அல்லது மாலை வேளையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலையும் தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சார்த்தி கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேங்கடவன். மங்கல காரியங்களில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கித் தந்தருளுவார் மகாலட்சுமி தாயார்.

முடிந்தால் இந்த நன்னாளில், பெருமாளுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பிரார்த்திப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பதும் இழந்த செல்வங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குமாரபாளையத்தில் நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு நிகழ்ச்சியையொட்டி, லட்சுமி நரசிம்ம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Tags:    

Similar News