குமாரபாளையத்தில் சீரான குடிநீர் வினியோகம் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
குமாரபாளையத்தில் குடிநீர் வினியோகம் சீராக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
குமாரபாளையத்தில் குடிநீர் வினியோகம் சீராக்க கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி சாலை, 12வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ஒரு மாத அளவில் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சரி செய்து தரக்கோரி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்களிடம் சமாதான பேச்சவார்த்தை நடத்திய நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுத்து, ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும், என உறுதியளித்தனர். இதன்பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.