கட்டுமான பணியை ஆய்வு செய்த நகராட்சி தலைவர்

குமாரபாளையத்தில் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்;

Update: 2023-05-23 04:30 GMT

குமாரபாளையத்தில் நடராஜா நகர் பகுதியில் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் ஜி.ஹெச். அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மார்க்கெட் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

ஆனங்கூர் பிரிவு, அரசு மேனிலைப்பள்ளி சாலை பகுதி பள்ளம் குறித்து ஆய்வு செய்து, அதனை சரி செய்ய உத்தரவிட்டார். சத்யாபுரி, நடராஜா நகர் பகுதியில் பழுதான மழைநீர் வடிகால் சேதம் குறித்தும், கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தினார். கவுன்சிலர் ஜேம்ஸ், நிர்வாகிகள் கதிரேசன், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.



Tags:    

Similar News