வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட நகரமன்ற சேர்மன்
குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நகரமன்ற சேர்மன் பார்வையிட்டார்.;
குமாரபாளையத்தில் காவிரி கரையோரப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை சேர்மன் விஜய்கண்ணன் வெள்ளத்தில் நடந்து சென்று நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் அங்கிருத்த நகராட்சி பணியாளர்களிடம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர சொல்லி அறிவுறுத்தினார். சேர்மன் ஆய்வின்போது கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், அழகேசன், கனகலட்சுமி நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.