சிறுவர் பூங்கா திறந்து வைத்த நகராட்சி தலைவர்

குமாரபாளையத்தில் சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்.;

Update: 2023-12-01 01:45 GMT

குமாரபாளையத்தில் சிறுவர் பூங்காவை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் சிறுவர் பூங்காவை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில், சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அங்கிருந்த ஊஞ்சலில் சிறுவர், சிறுமியர் ஆடி மகிழ்ந்தனர். இதில் பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஒ.,ராமமூர்த்தி, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், தர்மராஜன், அழகேசன், கோவிந்தராஜன், ராஜ், சுமதி, கனகலட்சுமி, விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தாரச்சாலை, வாட்டர் டேங்க் , பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.செயலர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதில் நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர தெற்கு தி.மு.க. செயலர் ஞானசேகரன், கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். அம்மன் நகர் முதல் தேசிய நெடுஞ்சால இணைப்பு சாலைவரை உள்ள பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.




Tags:    

Similar News