கலைத்திருவிழா தொடங்கி வைத்த நகராட்சி தலைவர்
பள்ளிபாளையம் ஒன்றிய அரசு பள்ளிகளின் கலைத்திருவிழாவை நகராட்சி தலைவர் தொடக்கி வைத்தார்.;
பள்ளிபாளையம் ஒன்றிய அரசு பள்ளிகளின் கலைத்திருவிழாவை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, இணைந்து நடத்தும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
கலைத் திருவிழாவை குமாரபாளையம்நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர் குணசேகரன்,மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவின்படி ஆண்டுதோறும் 6முதல் 12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. குமாரபாளையம் அருகே உள்ள அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி தலைமை வகித்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் சௌந்தரராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்தி நாச்சிமுத்து முன்னிலை வகித்தனர்.6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கவின் கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய பிரிவுகளில் 33 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு கலை,இசை, வாய்ப்பாட்டு,கருவி இசை, தோல் கருவி நடனம் நாடகம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் 74 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.