குமாரபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு

குமாரபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகத்தினர் சீர்படுத்தி குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-07 15:30 GMT

குமாரபாளையத்தில் குடிநீர் விநியோகம் குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் சாய நீர் கலந்து நகரின் பல பகுதிகளில் விநியோகம் ஆனது. இதனால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

பி.எட். கல்லூரி அருகில் இருக்கும் வாட்டர் டேங்கிலிருந்துதான்  நகர் முழுதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நிறைவு பெற்றது. குடிநீர் விநியோகம் சீரான முறையில் செய்யப்படுகிறதா? என்பது குறித்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். குடிநீர் தெளிவான நீராக வருவதாக பொதுமக்கள் கூறினர்.

Tags:    

Similar News