குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.;
சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 44,) தனியார் பஸ் ஓட்டுனர். இவர் பல்லக்காபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் தனது பல்சர் கருப்பு நிற டூவீலரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை 06:00 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணவில்லை. மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்ததை அறிந்த சுதாகரன் குமாரபாளையம் போலீசில் இது பற்றி புகார் மனு கொடுத்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி விசாரணை செய்து வருகிறார்கள்.