தாயின் உடல்நிலை கவலைக்கிடம்: மகன் வருகையை எதிர்பார்க்கும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள தாயாரை காண மகன் வருகைக்காக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.;

Update: 2023-03-11 03:20 GMT

கவலைக்கிடமாக உள்ள கமலா.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உடல்நிலை மோசமான நிலையில் உள்ள தாயாரை காண மகன் வர, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கமலா, 85. வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை மிகவும் மோசமாகி, சில நாட்கள் மட்டுமே உயிர் வாழும் நிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மகன் அங்கமுத்து, 45, எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள், இந்த நிலையில் தாயை கவனிக்க  அவரது மகன் வந்தால் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் உதவிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News