குமாரபாளையத்தில் 5ம் தேதி மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே ஜூலை 5ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-07-04 07:15 GMT

பைல் படம்

குமாரபாளையம் அருகே ஜூலை 5ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 5ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை

குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுக்கள்

குமாரபாளையத்தில் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு மின்வாரிய அதிகாரி இலவச நோட்டுக்கள் வழங்கினார்.

குமாரபாளையம் மின் வாரிய அலுவலர் கோபால், ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டுகள் வழங்குவது வழக்கம். நேற்று கோபால் தலைமையில் இலவச நோட்டுக்கள் வழங்கும் விழா நடந்தது. மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர்,. இதில் மின்வாரிய பொறியாளர் ஸ்ரீதர், பெருமாள், சமூக ஆர்வலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் எதிரில் மின்மாற்றி உள்ளது. இதன் ஒரு கம்பம் மிகவும் பழுதான நிலையில், உச்சியில் உடைந்தும், கீழ் பகுதியில் விரிசல் விட்டும் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தத்தின் பேரில், அருகில் உள்ள பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே மாற்றியமைக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது. காலம் கடந்து கொண்டே செல்வதால், கம்பமும் பழுதாகி வருகிறது. விபத்து அபாயம் ஏற்படும் முன், இந்த கம்பத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News