பவானியில் வேப்ப மரத்தில் பால் வடிந்த அதிசயம், வழிபட்ட பக்தர்கள்

பவானியில் வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசியம் நடைபெற்றது. இதனைக் கண்ட பக்தர்கள் வழிபட்டனர்.;

Update: 2021-08-21 17:00 GMT

பவானியில் பால் வடிந்த வேப்ப மரத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டது.

சித்தோடு அருகே ஆர்.என். புதூர் மாரியம்மன் கோவில் அருகே 10 ஆண்டுகளான வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளையில் இருந்து சில நாட்களாக வெள்ளை நிறத்தில் பால் வடிந்துள்ளது.


இதனை கண்ட அப்பகுதி பெண்கள் மஞ்சள், குங்குமம், பூசி வேப்ப மரத்திற்கு வழிபாடு நடத்தினர். வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்து வரும் தகவல் பரவியதால் சுற்று வட்டார பகுதி மக்களும் வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News