திருமண ஆசைகாட்டி மைனர் சிறுமி கடத்தல்: வாலிபர் போக்ஸோவில் கைது

14 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தியதாக வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-24 08:58 GMT

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர் ஹரிகிருஷ்ணன் என்பவரை குமாரபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் விசைத்தறி தொழில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சேலத்தைச் சேர்ந்த பெண் கூலி தொழிலாளி வேலை செய்து வருகிறார். அவர்  கணவரை பிரிந்து தனியாக அவரது  14 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது  மகள் பசிப்பதாக கூறி சாப்பிடுவதற்கு  வீட்டிற்கு சென்றார். ஆனால், அவர்  மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து எல்லா இடங்களில்  தேடியும் கிடைக்காததால்,  குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன சிறுமியை  தேடி வந்தனர்.

இந்நிலையில், ஓமலூரில் சிறுமி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமாரபாளையம் தொழில் பூங்காவில் வேலை செய்த, சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி, திருமண ஆசை காட்டி, கடத்திச் சென்று சிறுமியை வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து  போலீசார் ஹரி கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை  மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News