குமாரபாளையம் அரசு நூலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

குமாரபாளையம் அரசு நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-11-21 12:00 GMT

குமாரபாளையம் அரசு நூலகத்தில் பல்லிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்ச்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 02:00மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நூலக செயல்பாடுகள், நூலகத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த அமைச்சர், நூலகத்திற்கு தேவையான உதவிகளையும் கேட்டறிந்தார்.

பகுதி நேர நூலகமாக இருப்பதை, முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும், கூடுதலாக உதவி நூலகர் நியமனம் செய்யப்பட வேண்டும், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கூடுதல் புத்தகங்கள் தேவை என பொதுமக்கள், பொதுநல ஆர்வலர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி கூறினார்.

இலவச மருத்துவ முகாம்:

குமாரபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் திருச்செங்கோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிக்குமார் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரவிந்த் மருத்துவமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தனர். நகர வடக்கு நகர செயலர், நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், தி.மு.க. தெற்கு நகர செயலர் ஞானசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜானகிராமன், தங்கராஜ், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நுரையீரல் பரிசோதனைகள், கண் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு வலி, பொது மருத்துவம், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனை, சிறுநீர், மகளிர் சுகாதாரம் உள்ளிட்ட சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Tags:    

Similar News