அரசு பள்ளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான பெஞ்ச், டெஸ்க் வழங்கிய அமைச்சர் பொன்முடி
பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை, எக்ஸல் கல்வி நிறுவனம், தி காவேரி கல்வி நிறுவனங்கள் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கும் விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது;
பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை, எக்ஸல் கல்வி நிறுவனம், தி காவேரி கல்வி நிறுவனங்கள் இணைந்து குமாரபாளையத்தில் நடத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு, கல்லூரி துணை தலைவர் மதன்கார்த்திக் நினைவு பரிசு வழங்கினார். அருகில் எக்ஸல் கல்வி குழும தலைவர் நடேசன் உள்ளார்.
பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை, எக்ஸல் கல்வி நிறுவனம், தி காவேரி கல்வி நிறுவனங்கள் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கும் விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது.
பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை, எக்ஸல் கல்வி நிறுவனம், தி காவேரி கல்வி நிறுவனங்கள் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கும் விழா எக்ஸல் கல்வி குழும தலைவர் நடேசன், துணை தலைவர் டாக்டர் மதன் கார்த்திக் தலைமையில் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உயர் படிப்புக்கு அரசு வழங்க கூடிய, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு வழங்க கூடிய புதுமை திட்டத்தின் கீழ், மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம், ரோட்டரி, லயன்ஸ் சங்கம் பொது நோக்கோடு செயல்படும் தன்மை பற்றியும் பேசினார். அரசு பள்ளிகளுக்கு 32 லட்சம் மதிப்பிலான பெஞ்ச், டெஸ்க் வழங்கி வாழ்த்தினார்.
கல்லூரியை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காவிரி கல்வி குழும தலைவர் அன்பழகன், செயலர்கள் ஸ்ரீஇளங்கோவன், ராமநாதன், எக்ஸல் கல்வி நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் பொம்மண ராஜா, தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விமணிஷாந்த், பங்கேற்றனர். அன்னை ரவிசங்கர் நன்றி கூறினார்.