குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்
முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சர்வதேச ரோட்டரி சங்கம், குமாரபாளையம் ரோட்டரி மின்மயான அறக்கட்டளை இணைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் -31 செறிவூட்டிகள்- 10 அம்மா உணவகத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், அத்தியாவசியப் பொருட்கள் 600 பைகள் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் ரோட்டரி அரிமா சங்க நிர்வாகிகள் குமராபாளையம் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் பொதுமக்கள் முன்னணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.