குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜப்பான் மொழியை கற்பிக்கும் நோக்கத்தில் சென்னை, கிராமோதன் இந்தியா பவுண்டேசன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.
கிராமோதன் இந்தியா பவுண்டேசன் திட்ட தலைவர் சிவகீர்த்தி பேசுகையில், மாணாக்கர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தில் ஜப்பான் மொழியை கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாணக்கர்கள் இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என பேசினார்.
இதில் பேராசிரியர்கள் கீர்த்தி, கலாவதி, சரவனாதேவி, ஜெயவேல், பூங்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.