குமாரபாளையம் நகராட்சி சார்பில் மாஸ் கிளீன்: பணியாளர்கள் உறுதிமொழி
குமாரபாளையம் நகராட்சி சார்பில் மாஸ் கிளீனிங் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.;
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், குமாரபாளையம் நகராட்சியில் நகரை சுகாதாரமாக வைத்துக்கொள்வது குறித்து பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் - தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மாஸ் கிளீன் பல இடங்களில் செய்யப்பட்டது. மேலும் நகரை சுகாதாரமாக வைத்துக்கொள்வோம், அசுத்தம் செய்ய மாட்டோம், என்பது உள்ளிட்ட உறுதி மொழிகளை நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி வாசிக்க, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கவுன்சிலர் வேல்முருகன், ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.