மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே மாரியம்மன் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;
பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன் திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே மாரியம்மன் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம் அருகே படைவீடு பேரூராட்சி, பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன் திருவிழா ஏப். 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், அம்மன் திருவீதி உலா, வாணவேடிக்கை, மஞ்சள் நீர் மெரவணை உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறவுள்ளன.