குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்
திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகளில் திருப்தியாகி குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர்.;
குமாரபாளையம் 19 வதுவட்டம், மணிமேகலைவீதி, இந்திரா நகரைச்சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினின் சீரிய செயல்பாட்டினை கண்டு பல்வேறு கட்சியிலிருந்து விலகி, மணிமேகலை வீதி ஶ்ரீதர் என்பவர் தலைமையில் திமுக நகர பொறுப்பாளரும், முன்னாள் முனிசிபல் கவுன்சிலருமான எம்.செல்வம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நகர கழக அலுவலகத்தில் நேற்று மாலை அனைவருக்கும் சால்வையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் நகரபொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா.அன்பரசு, முன்னாள் முனிசிபல் கவுன்சிலர் கே.ஏ.இரவி, சின்னப்பொண்ணுகோவிந்தராஜ், எஸ்.ராஜ்குமார் மாவட்ட இளைஞரணி துணையமைப்பாளர் தம்பி கதிரவன்சேகர், வட்ட கழக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முன்னாள் முனிசிபல் கவுன்சிலர் ரங்கநாதன், கோவிந்தராஜ், இளைஞரணி துணையமைப்பாளர் ஏ.வெங்கடேசன் கிளைக்கழக தோழர்கள் பால்ராஜ்,கருப்புசாமி,சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.