பெண்கள் பள்ளி அருகே ஆண் சடலம்: போலீஸார் விசாரணை
பள்ளிபாளையம் ஆவரங்காடு அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்;
பெண்கள் பள்ளி அருகே ஆண் சடலத்தை மீட்டு பள்ளிப்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்
பள்ளிபாளையம் ஆவரங்காடு அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே, ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் இருந்ததால், சடலத்தை மீட்டு பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை.செய்து வருகிறார்கள்.
பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வெளியே சாக்கடை கால்வாய் ஒட்டி உள்ள பள்ளி சுற்றுச்சுவர் அருகே தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பள்ளிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, இறந்தவரின் பெயர் சீரங்கன் வயது (70) என்பதும், தர்மபுரி மாவட்டம், அனுமன் தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், பள்ளிபாளையத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீரங்கன், அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து விட்டு ஆங்காங்கே தங்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் .
நேற்று இரவு மது போதையில் தவறுதலாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளிபாளையம் அரசினர் பெண்கள் பள்ளி அருகே இதுபோல அதிகளவு வெளியூர் பகுதிகளை சேர்ந்த மர்ம நபர்கள், அங்கேயே தங்குவது, மது குடிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருவதால், இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.