மண்டலாபிஷேக விழாவில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் மண்டலாபிஷேக நிறைவு விழாவில்சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.;
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின் மண்டலாபிஷேக விழா சிறப்பு பூஜையில் அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையத்தில் 24 மனை மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழாவில் அரசு அதிகாரிகள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்து வந்தது. பெண் பக்தர்கள் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று, அம்மன் சரணம் சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். இதன் ஒரு கட்டமாக மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. கோவில் வளாகத்தில் புறப்பட்ட ஊர்வலம் புத்தர் வீதி சேலம் சாலை, தம்மண்ணன் சாலை வழியாக கோவிலில் நிறைவு பெற்றது.
நேற்று 108 சங்கு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று திருக்கல்யாண உற்சவம், கோ பூஜை, மாங்கல்ய பூஜை உள்ளிட்ட 10 விதமான பூஜைகள், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகியன நடந்தன. மேலும் அரசு அதிகாரிகளின் பணி சிறந்து, பொதுமக்களுக்கு நன்மை நடந்திட சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
காவல் ஆ.ய்வாளர் தவமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அனைவரும் கோவில் கமிட்டியார் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கோவில் மண்டலாபிஷேக பூஜையில் 48 நாட்களும் கட்டளை பூஜைக்கு கொடுத்த கட்டளைதாரர்கள் அனைவரும் கோவில் கமிட்டியார் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.