காவிரி பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை
குமாரபாளையம் அருகே காவிரி பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்டார்.
காவிரி பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை
குமாரபாளையம் அருகே காவிரி பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்திலிருந்து, நேற்று மதியம் 11:30 ,மணி சுமாருக்கு பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருதவர், திடீரென்று ஆற்றில் குதித்தார். கீழே தண்ணீர் இல்லாததால், பாறையின் மீது விழுந்ததில், மண்டை உடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது பற்றி அவ்வழியே வந்தவர்கள் மீட்புப்படையினர் மற்றும் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குமாரபாளையம் மீட்பு படையினர் சடலத்தை ஸ்ட்ரெட்சரில் வைத்து, கயிற்றால் கட்டி, மேலே இழுத்து, மீட்டனர். இந்த பாலத்தின் பாதி குமாரபாளையம் எல்லை என்றும், மீதி பாதி சித்தோடு போலீஸ் எல்லை என்றும் இருப்பதால், சம்பவம் நடந்த இடம் எந்த எல்லை என்பதில் இழுபறி நீடித்தது. ஆயினும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்கும் வரை, உடனிருந்து பணியாற்றினார்கள்.
மேலும் இந்த சம்பவம் நேரில் பார்க்கும் ஆவல் கொண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி, சடலம் மீட்கப்படும் காட்சிகளை வேடிக்கை பார்த்ததால், கூட்டம் அதிகரித்தது. சம்பவம் நடந்து சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் சம்பந்தப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. குமாரபாளையம் போலீசார்தான் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் குமாரபாளையம் மீட்பு படையினர் எந்த எல்லை என்பது பற்றி கவலைப்படாமல் சடலத்தை மீட்க பெரும் முயற்சி எடுத்து போராடினார்கள். இறந்த நபர் யார்? என்ன விபரம் என்று தெரியவில்லை. அலட்சியம் காட்டும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது அந்த எல்லைக்குட்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.