விபத்தை ஏற்படுத்தும் மரத்தை அகற்ற மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-06-04 14:30 GMT

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி 14வது வார்டு பேருந்து நிலையம் எதிரில் காட்டூர் விட்டலபுரி ராமர்கோவில் மண்டபத்திற்கு செல்லும் வழியில் மரம் ஒன்று விபத்து ஏற்படுத்தும் நிலையில் சாய்ந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் நடந்து சென்றால் கூட தலையில் மரம் முட்டும் அளவிற்கு உள்ளது.இரவு நேரங்களில் அந்த சாலையில் வயதானவர்கள் வரும்போது மரம் தாழ்வாக இருப்பது தெரியாமல் மரத்தில் மோதி விடுகிறார்கள்.

வாகன ஓட்டிகள் பலரும் இதில் மோதி காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியன உள்ள இந்த பகுதியில் இந்த வழியாக காய்கறி வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் அதிக தூரம் சுற்றி செல்லவேண்டியுள்ளது. மேலும் விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இங்கு நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை எடுத்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ராமர் கோவில், பாண்டுரங்கர் கோவில் ஆகியன இந்த பகுதியில் உள்ளது. பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள், இந்த கோவிலுக்கு வாகனங்களில் வரும் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பக்தர்கள் சிரமம் போக்க, மற்றும் அனைத்து தரப்பினர் துன்பம் போக்கவும், இந்த மரத்தை அகற்ற மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில், அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, விமலா, உள்ளிட்ட பலர் குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு வழங்கினர்.




Tags:    

Similar News