முன்களப் பணியாளர்களுக்கு பள்ளிபாளையம் திமுகவினர் மதிய உணவு வழங்கல்

முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று பள்ளிபாளையம் காவல் துறை மற்றும் மருத்துவ துறையினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது;

Update: 2021-06-08 10:00 GMT

பள்ளிப்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் யுவராஜ் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று அபாய உள்ள காலகட்டத்தில் ஓய்வின்றி பணியாற்றும் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பள்ளிப்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் யுவராஜ்  தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி செயலாளர் S.குமார் (எ) செந்தில்குமார், ஜெயகோபி, சுகுமார், வினோத்குமார், சீனிவாசன், சண்முகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News