குமாரபாளையம் மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

குமாரபாளையத்தில் கோவில் உண்டியலை திருடி அந்த உண்டியலை காட்டுக்குள் வீசியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

Update: 2023-04-01 11:15 GMT

குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ளசமயபுரம் மாரியம்மன் கோவில்

குமாரபாளையத்தில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை கொள்ளையடித்த திருடர்கள்,  உண்டியலை காட்டுக்குள் வீசிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரே சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு 9: மணிக்கு கோவிலை பூட்டிச்சென்ற பூசாரி வடிவேல், இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதையடுத்து பூசாரி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,  நள்ளிரவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை அங்கிருந்த துணியால் மூடி எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே எடப்பாடி செல்லும் சாலையில் விவசாய தோட்ட பகுதியில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில்,  உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணத்தினை திருடிவிட்டு, எடப்பாடி சாலையில் உள்ள விவசாய காட்டுக்குள் உண்டியலை தூக்கி எறிந்து சென்றது தெரிய வந்தது.இந்த திருட்டு சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News