குமாரபாளையம் அரசு பள்ளியில் சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா
குமாரபாளையம் அரசு பள்ளியில் சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா நடைபெற்றது.;
குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளியில் சிரிப்பானந்தா பங்கேற்று, சிரிப்பு யோகா கலையை கற்பித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளியில் சிரிப்பானந்தா பங்கேற்று, சிரிப்பு யோகா கலையை கற்பித்தார். மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மூன்று மணி நேரத்தில் 45 வகையான யோகா கலையை கற்பித்தார். மூளையை சுறுசுறுப்பாக்கி நினைவாற்றலை அதிகரித்தல், இதயம், நுரையீரல், கண், காது செயல்திறனை அதிகரித்தல், மனதை ஒருநிலைப்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் யோகா செய்து மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசு பள்ளி மாணவர்களின் திறமை மேம்பட யோகா ஆசிரியர் பயிற்சி வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியை புஸ்பலதா, விடியல் ஆரம்பம் பிரகாஷ், மக்கள் நீதி மையம் மகளிரணி செயலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
சிரிப்பானந்தா சம்பத் கூறுகையில், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருளாதுதான் ஆனால் அந்த நேரத்தில் வெளிவரும் ஒளிக் கதிர்வீச்சிலிருந்து தப்பித்துக் கொள்ள அது உதவும். அதுபோல எலெக்ஷன் வந்துபோகும் வரை சோஷியல் மீடியா பத்திரிகை தொலைக்காட்சி மீடியாக்கள் கூட்டங்கள் மாநாடுகள் இவற்றிலிருந்து நம்மைக் கொஞ்சம் தள்ளி நிறுத்திக் கொள்வோம். அது மன உளைச்சல் மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது நிச்சயம். விதியைக் கூட சிரிப்பினாலே துரத்தி அடிப்பேன் என்ற திட்ப மனம் கொள்ள சிரிப்பு யோகாவும் நிகழ்விக்கப்பட்டது.
மனைவி நல வேட்பு நாளில் தாம்பரம் சானடோரியம் மனவளக்கலை மன்றத்தில் நமது சிரிப்பு யோகாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மன்ற அன்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் கொண்டாடினர்.
ஒவ்வொரு சிரிப்பு யோகா நிகழ்வும் எனக்கு ஒரு தேர்வுதான். உடல், மன, உயிர் ஒன்றிணைந்து அதில் கரைய வேண்டும். முன் பயிற்சிகள் பல செய்து பழக வேண்டும். தொடர் பயண களைப்புகளை உடலும் மனதும் வெளிப்படுத்தாத வண்ணம் பயிற்சி கொடுத்துக் கொள்ள வேண்டும். பங்கு கொள்ளும் ஒவ்வொருவரையும் பிடிக்குள் கொண்டுவர பெரும் பிரயத்தனங்களை நம் சக்தியை எல்லாம் பிரயோகித்து செய்ய வேண்டும். ஏதோ பத்து பதினைந்து படங்களாவது நடித்ததாகவும், ஹீரோ வாய்ப்புகளை தட்டிக் கழித்ததாகவும் அனாவசியமாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஏதோ இரண்டொரு சின்ன வாய்ப்புகள் சின்ன வேடங்களுக்கு வந்து எனது ஈடுபாடு இல்லாமையால் தவறிப்போன அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அந்த சினிமா டைரக்டரை நடிகரை உங்களால் எளிதில் யூகித்து விட முடியும் ஏனெனில் அவரே யூகி சேது அவர்கள்தான். சிரிப்பு யோகா செய்ய என்னைக் கூப்பிடுகிறார்கள் செல்லலாமா என்று கேட்டார் நண்பர்.மகிழ்ச்சியுடன் செல்லுங்கள் எதற்கு என்னை கேட்கிறீர்கள் என்றேன். ஒன்றுமில்லை சார் நீங்கள் செய்து கொண்டிருந்த இடம் அது. அதனால் உங்களுடைய அனுமதி பெறாமல் அங்கு செல்வது தவறு என்பதால் கேட்கிறேன்.
தமிழகத்திலேயே முதன் முறையாக தினந்தோறும் சிரிப்பு யோகா நடைமுறைப்படுத்தப்படுகிறது. அக்கேடமிக் கல்வி மட்டும் இன்றி பல்வேறு கலை விளையாட்டு பண்பாட்டு வாழ்வியல் பயிற்சிகளும் இங்கு கற்பிக்கப்படுகிறது.
எனக்கும் சில சினிமா வாய்ப்புகள் வந்தன. அவைகளை எனக்கு பற்றிக் கொள்ளத் தெரியாததால் அல்லது ஆர்வமின்மையால் விட்டுவிட்டேன். எனது நடிப்பிலிருந்து சினிமா உலகம் தப்பிய தகவல்களை நாளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.