தவற விட்ட பணத்தை போலீசிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி: கிரைம் செய்திகள்...

குமாரபாளையத்தில் தவற விட்ட பணம், மொபைல் போன் ஆகியவற்றை கூலி தொழிலாளி போலீசிடம் ஒப்படைத்தார்.;

Update: 2022-12-25 01:03 GMT

குமாரபாளையத்தில் தவற விட்ட பணம், மொபைல் போன் ஆகியவற்றை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

குமாரபாளையத்தில் தவற விட்ட பணம், மொபைல் போன் ஆகியவற்றை கூலி தொழிலாளி போலீசிடம் ஒப்படைத்தார்.

குமாரபாளையம் பவர் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் பழனிவேல், 35. கூலித்தொழிலாளி. இவரும் இவரது நண்பர் ஒருவரும் நேற்று மாலை 12:30 மணியளவில் சேலம் சாலை பவர் ஹவுஸ் பகுதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த டூவீலரில் இருந்து பை ஒன்று தவறி கீழே விழுந்தது. அதில் மொபைல் போன், பணம் இருந்ததால் அதனை உடனே குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவியிடம் ஒப்படைத்தனர். பையில் இருந்த பர்ஸ்ல் ஒரு போன் நம்பர் இருந்தது. அவருக்கு போன் செய்து ஸ்டேஷன் க்கு வரவழைத்து விசாரணை செய்ததில், வட்டமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அர்ஜுனன், 35, என்பது தெரியவந்தது. அவரிடம் அவருக்கு சொந்தமான மொபைல் போன், பணம் 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது. இதற்காக போலீசிடம் பையை ஒப்படைத்த பழனிவேலுவுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் அர்ஜுனன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடல்

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் பொதுமக்கள் பலர் குளித்துக்கொண்டும், து துவ்வைதுக்கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து வந்தது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தர, அவர்கள் நேரில் வந்து சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார், சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஜி.ஹெச் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து இவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்தில் இருவர் பலி

சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுக்கா ஏரிக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம், 60. rநாமக்கல் மாவட்டம், ராசிபுரம், புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 52. கட்டிட தொழிலாளிகள். நேற்று காலை 07:45 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில், தங்கராஜ் வாகனத்தை ஓட்ட, அருணாசலம் பின்னால் உட்கார்ந்து வர டி.வி.எக்ஸல் . வாகனத்தில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது கோவை பக்கமிருந்து வேகமாக வந்த சரக்கு ஈச்சர் வாகனம் இவர்கள் வாகனம் மீது மோத, பலத்த காயமடைந்தனர். இவர்களை ஜி.ஹெச்.கொண்டு வந்து பரிசோதித்த போது, இவர்கள் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், ஈச்சர் வாகன ஓட்டுனர் ஓசூரை சேர்ந்த பெருமாள், 22, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மழைநீரில் வழுக்கி விழுந்தவர் சாவு

குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை வாசவி டிபார்ட்மெண்ட் கடை அருகே வசிப்பவர் நாகராஜ், 68. இவர் அக். 25ல் காலனி மருத்துவமனை அருகே மழையில் நனைந்து வந்த போது, வழுக்கி விழுந்தார். இதை யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், சிறுநீர் கழிக்கும் இடத்தில் புண் ஏற்பட்டு நவ. 20ல் ஈரோடு ஜி.ஹெச். சென்ற போது, தலையில் அடிபட்டு ரத்தகட்டு ஏற்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது, சேலம் ஜி.ஹெச். செல்லுங்கள் என்று சொல்லியும் கேட்காமல் வீட்டிற்கு வந்தார். உடல்நிலை மீண்டும் மோசமாக, சேலம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 01:15 மணியளவில் இறந்தார்.

அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம் நகரின் பல இடங்களில் மது அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பல இடங்களில் ஆய்வு செய்தனர். கோட்டைமேடு காசி கவுண்டர் ஓட்டலில் சிதம்பரம், 54, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், அருவங்காடு பகுதியில் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், சிதம்பரம், 54, நந்தகுமார், 32, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலி லாட்டரி விற்ற வழக்கில் 6 பேர் கைது 

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் 77 வயது முதியவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.கையும் களவுமாக பிடிபட்ட ஈரோடு ரமேஷ், 25, பள்ளிபாளையம் தினேஷ்குமார், 30, குமாரபாளையம் வெங்கடேசன், 34, ஈஸ்வரமூர்த்தி, 36, அல்லிமுத்து, 57, ஆகிய 5 பேர்களிடம் 5 டச் மொபைல் போன்களும், தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன், 77, என்ற முதியவரிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் 252ம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது: ஆன் லைன் ரம்மி விளையாட்டில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உத்திரவின் பேரில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News