செல்வமாரியம்மன், அங்காளம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையம் அருகே செல்வ மாரியம்மன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற வுள்ளது;
குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன.
குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை காலனி சக்தி விநாயகர், செல்வ மாரியம்மன், மதுரை வீரன், முனியப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கணபதி யாகத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜைக்கு பின், இன்று (திங்கள்கிழமை) காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். செப். 12 முதல் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன.
குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் தொடங்கியது. பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 5:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். செப். 12 முதல் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன.