மகா இரட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே மகா இரட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது;

Update: 2023-06-30 03:50 GMT

குமாரபாளையம் அருகே மகா இரட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் மகா கணபதி, மகா இரட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஜூன் 21ல் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் துவங்கியது. 25ல் விநாயகர் பூஜை, தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், 26,27,28ல் யாக சாலை பூஜைகள், 29ல் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News