தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் குமாரபாளையம் முதலிடம்

குமாரபாளையத்தில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.;

Update: 2024-01-09 01:18 GMT

குமாரபாளையத்தில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிமுக பள்ளிபாளையம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் குப்பாண்டபாளையம் ஊராட்சி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளியில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்தினார். இதில் சர்வதேச கைப்பந்து போட்டி விளையாட்டு வீரர் நடராஜ் பங்கேற்று, விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.  60க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் குமாரபாளையம் ஆதிரை உணவகம் அணி முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழல் கோப்பை, இரண்டாவது பரிசாக பெருந்துறை ஜி பாய்ஸ் அணியினர் 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழல் கோப்பை, மூன்றாவது பரிசாக கரூர் அணியினர் 9 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பை, நான்காவது பரிசாக குப்பாண்டபாளையம் ஊராட்சி ஜே.ஜே வாரியர்ஸ் அணியினர் 6 ஆயிரம் ரூபாய்மற்றும் சுழல் கோப்பை வென்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், குப்பாண்டபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னுசாமி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பொன்னுசாமி, பூங்கொடி, ஒன்றிய குழு உறுப்பினர் தனசேகரன், ஒன்றிய குழு புனிதா, குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புனிதா, உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News