கடன் பெற்றவர் இறப்பு: காப்பீடு தொகை மூலம் ஆவணங்களை ஒப்படைத்த கூட்டுறவு சங்கம்

குமாரபாளையத்தில் கடன் பெற்றவர் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் பெற்று, வீட்டு ஆவணங்களை வாரிசுதாரர்களிடம் ஒப்படைத்தனர்;

Update: 2023-02-16 18:15 GMT

குமாரபாளையத்தில் கடன் பெற்றவர் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் பெற்று, கூட்டுறவு கட்டிட சங்கத்தினர் வீட்டு ஆவணங்களை வாரிசுதாரர்களிடம் ஒப்படைத்தனர்.

கடன் பெற்றவர் இறந்து போனதையடுத்து இன்சூரன்ஸ் தொகையின் மூலம்   பயனாளியின் குடும்பத்தினரிடம் கூட்டுறவு கட்டிட சங்க நிர்வாகம்  வீட்டு ஆவணங்களை ஒப்படைத்தது

குமாரபாளையத்தில் கடன் பெற்றவர் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் பெற்று, கூட்டுறவு கட்டிட சங்கத்தினர் வீட்டு ஆவணங்களை வாரிசுதாரர்களிடம் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் குமாரபாளையம் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் 4 லட்சத்து 44 ஆயிரம் கடன் பெற்றார். இவர் உடல்நலமின்றி 2022, நவ. 4ல் இறந்தார். இவரது கடன் தொகைக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெறப்பட்டு, இறந்தவரின் வாரிசுகளான அம்மா மாரியம்மாள், அக்கா சாந்தகுமாரி, மனைவி சுசித்ரா ஆகியோரிடம் வீட்டு பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சங்க தலைவர் ரவி மற்றும் செயலர் ரவீந்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டன.

கூட்டுறவு சங்கம் குறித்து வங்கி நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டுறவு இயக்க வரலாறு இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கூட்டுறவு இயக்கமானது, ரோச்டேல் பயனீர் என்பவரால் சிந்திக்கப்பட்டு, 1844-ஆம் ஆண்டில் அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்தில் தாமே, தங்களுக்குள், தங்கள் தேவைக்காக தங்கள் மூலம் என்ற கொள்கைகளுடன் ரோச்டேல் சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு பண்டகசாலைகளை துவக்கினர். அக்கூட்டுறவு சங்கத்திற்கான நடைமுறை விதிகள் ஏற்படுத்திக் கொண்டனர். இக்கூட்டுறவு சங்கமே, பிற நாடுகளில் கூட்டுறவு சங்கங்கள் துவக்க முன்னோடியாக விளங்கியது.

ஆங்கிலேயர்கள் கூட்டுறவு இயக்கத்தை அறிமுகப்படுத்த, 1904-ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் சங்கங்கள் சட்டத்தை இயற்றியது. பின் கூட்டுறவு இயக்கத்தை நாடு முழுவதும் பரப்ப கூட்டுறவு சங்கங்களின் சட்டம்,1912 கொண்டு வந்தனர்.இந்திய விடுதலைக்குப் பின்னர் கூட்டுறவு இயக்கம் வளர்ந்த நிலையில், சுவாமிநாதன் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களின் முயற்சியால் நாட்டில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி ஏற்பட்டது.

கூட்டுறவு அமைப்புகளின் கிளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுவப்பட்டதால், இந்திய அரசு பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002 இயற்றியது. இந்தியாவின், சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தை பரப்ப 1932-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1932 மற்றும் 1934-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவு நிலவள கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1934 கொண்டு வந்தனர். இந்திய விடுதலைக்கு பின்னர், கூட்டுறவு சட்டங்கள் திருத்தப்பட்டு, 1961-ஆம் ஆண்டில் திருந்திய கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961 மற்றும் விதிகள் அமல் படுத்தப்பட்டது.

ஒரே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் இருந்த அனைத்து கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்கள், வேளாண்மைச் சங்கங்கள், நகர வங்கிகள், நிலவள வங்கிகள் தவிர, பிற வகையான கூட்டுறவுச் சங்கங்கள், அவ்வமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் தலைமையில், கூட்டுறவுச் சங்க பதிவாளரின் அதிகாரங்களுடன் செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் தரத்தை மேலும் வலுப்படுத்த, 1983-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம், 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள், 1988 தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags:    

Similar News