தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் பாஜக சார்பில் பாஜக வை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2023-09-25 15:45 GMT

குமாரபாளையம் பாஜக சார்பில் பாஜக வை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

குமாரபாளையம் பாஜ க சார்பில் பா.ஜ.க. வை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பாஜக வை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழா குமாரபாளையம் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.

1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். நாக்பூரில் உள்ள ராஸ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரசாகரர் ஆனார்.

தேசிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த இராஷ்டிர தர்மா எனும் மாத இதழை, 1940இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.

ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது உபாத்யாயா அரசியல் வேலைத் திட்டமாக வடிவமைக் கப்பட்டு 1965 ஆம் ஆண்டில் ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளின் தொகுப்பாகும்.

கோல்வால்கர் ஆர்கானிசம் என்ற கருத்தை நம்பினார், அதிலிருந்து ஒருங்கிணைந்த மனித நேயம் மிகவும் வேறுபட்டதல்ல. ஒருங்கிணைந்த மனிதநேயத்தில், கோல்வால்கரின் எண்ணங் கள் முக்கிய காந்திய கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கூடுதலாக இருந்தன மற்றும் இந்து தேசியவாதத்தின் பதிப்பை வழங்கின.

இந்த பதிப்பின் நோக்கம் சமுதாயத்தில் சமத்துவத் தை ஆதரிக்கும் வளர்ச்சி சார்பு மற்றும் ஆன்மீக பிம்பமாக ஜனசங்கின் உருவத்தை உருவாக்குவதாகும். இந்த கருத்துக்களை உருவாக்குவதும் ஏற்றுக்கொள்வதும் 1960 கள் மற்றும் 1970 களின் இந்திய அரசியல் அரங்கில் முக்கிய சொற்பொழிவுகளுக்கு ஏற்ப உதவியது. இது ஜனசங் மற்றும் இந்து தேசியவாத இயக்கத்தை இந்திய அரசியல் பிரதான நீரோட்டத்தின் உயர்மட்ட வலது புறமாக சித்தரிக்கும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும் போது இரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும் என்றார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார். இதன் தொடர்ச்சியாக பாஜக உருவானது.



Tags:    

Similar News