சர்வதேச பிஸ்ட்பால் போட்டிக்கு குமாரபாளையம் மாணவி தேர்வு..!

குடும்ப வறுமை காரணமாக, தேவையான பணம் இல்லாததால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை மாணவி தபஸ்வினிக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-06 12:06 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள ஆனங்கூர் சுந்தரம்நகர் அடுத்த, கருப்பணன்நகரை சேர்ந்தவர் சக்திவேல்(45) ராதிகா தம்பதிகள். தம்பதிகள் இருவரும் கூலிவேலைகள் செய்து வருகின்றனர். மகள் தபஸ்வினி(15) அரசுப்பள்ளியில் எட்டாம்வகுப்பு படிக்கிறார்.

பிஸ்ட்பால் விளையாட்டில் ஆர்வமுள்ள தபஸ்வினி, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து சர்வேதச பிஸ்ட்பால் அசோஸியேஷன் நடத்தும் உலக அளவிலான போட்டிக்கு தேர்வானார். இந்த போட்டி ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா எனும் பகுதியில் ஜூலை 22 ல் நடக்கிறது. ஆஸ்திரியா நாட்டிற்கு செல்ல பணம் ஒரு லட்சத்து, எண்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. குடும்ப வறுமை காரணமாக, பணம் இல்லாததால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை தபஸ்வினிக்கு ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள் உதவி கேட்டு கூறும்போது எனது மகள் சர்வேதேச போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைப்பாள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது குடும்ப வறுமையால் மகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நல்ல உள்ளங்கள் உதவி செய்தால் சர்வேதேச போட்டிக்கு எனது மகளை அனுப்பி வைத்து, நாட்டிற்கு பெருமை சேர்க்கவுள்ளேன். உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் எங்களை 98659-19428, 95853-81000 இந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News