எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சாதனை

குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு போட்டி யில் சாதனை படைத்துள்ளனர்

Update: 2023-09-12 13:45 GMT

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் தாளாளர் இளவரசன் நினைவாக நடந்த கையுந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் பள்ளி முன்னாள் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் தாளாளர் இளவரசன் நினைவாக முதலாம் ஆண்டு கையுந்து போட்டி, முன்னாள் மாணவர்களால் இரு நாட்கள் நடத்தப்பட்டது.  இதில் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், சென்னை ஆகிய ஊர்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. தாளாளர் ரவீந்திரன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அணியினர் இரண்டாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தணிகாசலம் செய்திருந்தார்.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்ட கருத்தரங்கம் நடந்தது. அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் நான் முதல்வன் திட்ட பயிற்சி ஐந்து நாள் கருத்தரங்கம் தொடங்கியது.

கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் இளங்கோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை ஊக்குவித்து, அடுத்து என்ன படிக்கலாம், என்று வழிகாட்டுவதுடன், தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் தனித் திறன் பெறவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது போன்ற திறன் மேம்பாடு பற்றி பேசினார்.

துணை தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன் ,இன்கேஜ் நிறுவனம் நிர்வாகி விஜய் உள்பட பலர் பேசினார்கள்.ஐந்து நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் தருமபுரி கிருஷ்ணகிரி , சேலம், மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 69 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 55 ஆசிரியர்கள் பங்கேற்றனர்..இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி மீனாட்சி சுந்தர்ராஜன், ஒருங்கிணைப்பாளர் , இளங்கோ , திட்ட தொடர்பு அலுவலர் கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர் .


Tags:    

Similar News